இராணுவப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நிரூபிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இன்று இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
படைவீரர்களின் சாட்சியம் என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு தும்முல்லவில் அமைந்துள்ள சம்புத்த மந்திரயவில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என எடுத்துரைக்கும் வகையில் 200 பக்கங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க, ரியர் அட்மிரல் எச்.ஆர்.அமரவீர, ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோருக்கும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட முன்னதாக நாளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 16ம் திகதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
படைவீரர்கள் குற்றமற்றவர்கள் என வெளியாகும் முதல் அறிக்கை இதுவென கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
-http://www.tamilwin.com