கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.
கொய்யா இலையின் டீயின் மருத்துவ நன்மைகள்
- கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
- கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது.
- கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
- கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.
- கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்துகிறது.
- 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.
- கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.
- எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும்.
- கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.
- -http://news.lankasri.com