கோத்தபாயவே கொலை செய்தார் : கொலை செய்தவர்கள் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கின்றது

gotabaya_AFPகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கொழும்பு கதிரேசன் வீதி மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலக்க தகடுகள் இல்லாமல் இரவு நேரங்களில் வந்து வீட்டில் இருந்தவர்களை தூக்கி சென்றார்கள்.

இதற்கு எதிராக நான் முன்வந்த போது, அதற்கு ஆதரவாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரும் குரல் கொடுத்தனர்.

இதன் காரணமாக அவர்களும் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இருக்கின்றது. சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலைகளை வேறு ஒருவரால் செய்யப்பட்டதாக கூறமுடியாது.

ஏனெனில் இந்த சம்பவங்கள் இடம்பெற்ற போது பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்சவே இருந்தார். இவ்வாறான குற்றச் செயல்கள் காரணமாகவே, இலங்கை இன்று சர்வதேசத்தின் முன்னிலையில் தலை குனிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக இரகசிய சிறப்பு படை பிரிவு ஒன்றை இயக்கியதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்த இரகசிய பிரிவானது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி..

கோத்தபாய தலைமையில் மரணப்படை..! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

-http://www.tamilwin.com

TAGS: