பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் மறுப்பு

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, ‘சார்க்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, மாலத்தீவு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய தலைமையமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்த்தும் பிரச்னை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, மன்மோகன் சிங் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு வருமாறு, மன்மோகன் சிங்கை ராஜபக்சே அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்னைகளில், நல்ல தீர்வு ஏற்படும் வரை இலங்கைக்கு வர இயலாது என இந்திய தலைமையமைச்சர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தலைமையமைச்சர் கிலானி, இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே ஆகியோரை, நேற்று மன்மோகன் சிங், மாலத்தீவில் தனித்தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

மாலத்தீவு தலைநகர் மாலேயில் இருந்து, 700 கி.மீ., தெற்கே அமைந்துள்ள அடு அடோல் என்ற கூட்டு தீவுப் பகுதியில் உள்ள, ‘ஷாங்கிரிலா ரிசார்ட்’ என்ற சொகுசு விடுதியில் சார்க் நாடுகளின்  தலைவர்கள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: