“நாம் நம்பியது ஐ.நாவையே, நீதி கிடைக்கும் என்று 8 ஆண்டுகள் காத்திருந்தோம். ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்திருப்பதானது அந்த நம்பிக்கையை தகர்த்தியுள்ளது” என தமிழ் இன உணர்வாளரும் இயக்குனருமான கௌதமன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரத தேசம் விடுதலைப்புலிகளை திட்டமிட்டு அழித்தமைக்கான காரணம் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், தமிழ் மக்களின் தற்போதைய நிலை மற்றும் தமிழர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் பற்றி பல தகவல்களை கௌதமன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/mFRJw205SvQ
எப்படியும் விசா பெற்று ஜெனீவா போவது ..அங்கே இந்திய பிரதிநிதிகளின் அறிக்கையை படிப்பது ..ஓரத்தில் நின்று ஒரு பேட்டி ….கேவலம் …பிணம் தின்னி கழுகுகள்