பெட்ரோல் விலை 3 சென் கூடுகிறது, டீசல் 3 சென் குறைகிறது

 

petrolpricewednesdayரோன்95 மற்றும் ரோன் 97 எரிபொருள் விலை இன்று நள்ளிரவிலிருந்து ஒரு லீட்டருக்கு 3 சென் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி ரோன்95 பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.16 க்கும் ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு ரிம2.44 க்கும் விற்கப்படும்.

சின் சியு டெய்லி நாளிதழ் அளித்துள்ள தகவல்படி டீசல் விலை 3 சென் குறையும். புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.08 ஆக இருக்கும்.

கடந்த வாரத்திலிருந்து எரிபொருள் விலை ஒவ்வொரு புதன்கிழமையும் மாலையில் அறிவிக்கப்படுகிறது. முன்பு, மாதத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டது.