ஷரியா நீதிமன்றங்கள் ( கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டத்திற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த திருத்தங்கள் அடங்கிய மசோதா இன்று விவாதிக்கப்படும்.
அந்த மசோதா நாடாளுமன்ற நடவடிக்கை பட்டியலில் இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. விவாதம் இன்று மதியம் மணி 12.00 க்கு பின்னர் தொடங்கும்.
அரசாங்கம் சம்பந்தப்பட்ட மசோத்தக்கள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் அதன் 20 மணி நேர கூட்டத்தை இன்று காலை மணி 5.05 க்கு முடித்துக் கொண்டது.