மலரும் தமிழீழத்தை பார்க்க வேண்டும் என்று கூறிய குட்டி மணியின் கண்களை தோண்டி படுகொலை செய்தார்கள்

kutty maniசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டி மணி, தங்கதுறை, உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஏதாவது கூற ஆசைப்படுகின்றீர்களா என கேட்கப்பட்டது.

இதன் போது மலரும் தமிழீழத்தை எங்கள் கண்களால் பார்க்க வேண்டுமென குட்டி மணி கூறியிருந்தார்.

அதனால் குட்டி மணியின் கண்கள் தோண்டப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றின் இன்றைய அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை நீதிமன்றங்கள் பக்கச்சார்பான முறையில் செயற்படுகின்றது. நாங்கள் பேசுவதற்கான இடமாக மட்டுமே பாராளுமன்றம் காணப்படுகின்றது.

இங்கே பேசுபவை செயற்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எங்களுக்குள்ளேயே எழுகின்றது. குமாரபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டி மணி, தங்கதுறை, உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஏதாவது கூற ஆசைப்படுகின்றீர்களா என கேட்கப்பட்டது.

இதன் போது மலரும் தமிழீழத்தை எங்கள் கண்களால் பார்க்க வேண்டுமென குட்டி மணி கூறியிருந்தார். அதனால் குட்டி மணியின் கண்கள் தோண்டப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதன் மூலம் ஏதாவதொரு வேலையை செய்தாவது தம்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளை கொண்டு நடத்துவதற்கு பணத்தைப்பெற்றுக்கொள்வார்கள் என அவர் கூறினார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டில் விடுதலைப் புலிகள் இல்லை. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக தெரிவித்து அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நாட்டில் யுத்தத்தை கொண்டு நடத்தியவர்கள் இன்று அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகள் விடத்தில அரசாங்கம் கவனம் செலுத்தாமல் இருக்கின்றது. இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள்.

நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். காணாமல் போனவர்கள் குறித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருக்கின்றது.

இதன் போது படையினர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான படைத்தளபதி ஒருவர் சரணடைந்தவர்கள் குறித்த பெயர் விபரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

எனினும், தற்போது படையினரிடம் எவரும் சரணடையவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கின்றார். அப்படியானால் நாட்டின் நீதித்துறை எங்கு செல்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த கால சம்பவங்களை வைத்து பார்க்கும் போது நாட்டின் நீதித்துறை இன சமத்துவத்துடன் செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. நாட்டின் நீதித்துறை சிங்கள மக்களுக்கு மட்டுதான் இருக்கின்றதா என்ற கேள்வி தமிழ் மக்களிடத்தில் எழுகின்றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு மக்களை அதனுள் வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும் பாதுகாப்பு வளையங்களுக்குள்ளும், குண்டுகள் வீசப்பட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இறுதி யுத்தத்தின் போது பலர் படையினரிடம் சரணடைந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் பலவும் இருக்கின்றன. கடந்த காலங்களில் அவை தொடர்பான ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

ஆனாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வருகின்றது. இராணுவத்தை காட்டி கொடுக்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறிவருகின்றார்.

அப்படியானால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், கொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியின் பதில் என்ன..?

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்படுவதாக நாளாந்தம் செய்திகளில் படிக்க முடிகின்றது. கடல் வழியாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்படியானால் கடற்படையினரா கஞ்சாவை கடத்தி வருகின்றனர். பாரியளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது, போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ள என புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன.

எனினும், அந்த போதைப்பொருளையும், கஞ்சாவையும் கடத்தியவர்களின் புகைப்படம் வெளிவருவதில்லை. இங்கு நீதித்துறை என்ன செய்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பொலிஸார் கையூட்டல் பெற்றுக்கொள்கின்றனர். படையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை, 150,000 மேற்பட்ட படையினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர். அப்படியிருக்கும் போது வடக்கில் எப்படி போதைப்பொருள் கடத்தல்கள் மேற்கொள்ள முடியும் என சி.சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

-puthinamnews.com

TAGS: