தனது அறிவுரையை கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமை இன்றும் செயற்பாட்டில் இருந்திருக்கும் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் கருத்து வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்படுகிறோம். பல கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்.
பிரபாகரனுக்கு நான் எதிரி இல்லை, நான் சகல விடயங்களையும் ஆழ்ந்து அறிந்தவன் என்ற ரீதியில் சில நடவடிக்கையில் இருந்து பிரபாகரனை திருந்தி செயற்படச் சொன்னேன். தம்பி சாபத்துக்கு ஆளாக போகிறாய் உடனடியாக பேச்சுவாரத்தையை நடாத்துங்கள் என தெரிவித்தேன். அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார். அன்றைய ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினேன். ஆனால் நிறுத்தவில்லை.
இப்பகுதியில் ஒருவர் கூட யுத்தத்தை நிறுத்துவதற்கு நினைத்திருந்தால் இன்று இந்த நிலை எமக்கு வந்திருக்காது. பல தலைவர்கள், பல நாடுகள் கேட்டார்கள் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டார்கள். கேட்கவில்லை இறுதியில் மக்கள் அழிக்கப்பட்டார்கள். தப்பி ஓடிவந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், அங்கு நடந்தவை பல எமக்கு வெக்கம், அவமானம் என்பவற்றை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் என அனைவரும் அறிவார்கள்.
யுத்தத்தை நிறுத்துமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சொல்லவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய புனிதமான கடமையை யாரும் செய்யவில்லை. நடந்த அநீதிகளுக்கு தற்போது நீதி வேண்டி சர்வதேசத்திடம் போய் நிற்கிறோம்.
விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களை அதிகம் கொலை செய்தார்கள் என புதிதாக வந்துள்ள சுமந்திரன் எலிக்குட்டி தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்து விட்டு அத்துடன் 2 வருடங்களில் நல்ல வெளிநாட்டு தலையீடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இது நடக்கப்போற விடயம் இல்லை சர்வதேச விசாரணையும் நடக்கப்போவதில்லை.
சம்பந்தன் மாவைக்கு அரசியல் தெரியாது. சுமந்திரனுக்கு அறவே அரசியல் தெரியாது. இவர்கள் எல்லாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யர்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com


























அமெரிக்க 35 லட்சம் கோடி குடுத்து , பிரபாகரனை தமிழ் ஈழ முதல் பிரதமர் ஆக்குகிறேன் என்றதிற்கு , மறுத்தார் பிரபாகரன். அமெரிக்காவிற்கு அதனால் 35 ஆண்டு திரிகோண மலை கடல் பிரதேசம் தேவை பட்ட்து மறுப்பதிற்கில்லை. பிறகு நோர்வே தலைமையில் நடந்த அமைதி பேச்சு (AUTONOMY) என்ற சுய ராஜ்யத்தையும் பிரபாகரன் நிராகரித்தார் . கருணா பத்மா போன்றவர்கள் கூறிய அறிவுரைகளையும் நிராகரிக்க படடன …. பழைய நிலைமையில் இருந்த TELO PLOT EPLRF TT என்ற சிந்தாந்திற்கு தள்ள படடனர் ஈழ தமிழ் போராளிகள். துரோகிகள் உருவாக்கப்பட்ட்னர் பிரபாகரன் அவர்களின் பிடிவாத குணங்களால் …… காலமே இதற்க்கு சாட்சி. 30 ஆண்டு கால ஆயுத போர் , போராளிகளின் சுதந்திர தாகத்தை சோர்வடைய செய்தது … தலைவர்கள் மீது அதிருப்ப்தி ஏற்பட்ட்து …. ரானில் விக்ரம சிங்கே, துரோகச்சுடரை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டார் …. இங்கே தான் சிங்களவர்கள் சூழ்ச்சி இந்தியாவை ஆண்ட காங்கிரஸையும் அமெரிக்காவை ஆண்ட டெமோகிராட்ட்தும் பிரிவினை வாதிகளை முழு தீவிரவாதிகளாக முத்திரை குத்த தள்ளியது … சில இடங்களில் இஸ்லாமிய தீவிரவாத தாக்கம் , அமெரிக்காவை கண்களை முடி கொள்ள வைத்தது …பிறகு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை பதவியை காட்டி சரி செய்தது இந்திய காங்கிரஸ். மேலும் இந்திய ராணுவம் வகுத்த பாதையில் போர் துவங்கி …. இலங்கை ராணுவம் வகுத்த பாதையில் முடிவடைந்தது ….
ஒரு இனமே அழிந்தது … மிஞ்சியவன் அடிமையானான் ……
உண்மையான விடுதலை வீரர்கள் சொந்த மக்களை விற்பது இல்லை …PLO தலைவர் யாசீர் அரபாத் கூட பல அரசுகள் வழங்கிய இனிப்பான உதவிகளை உதறியவர் ..
இந்த ஆனந்த சங்கரி …சிங்கள அரசுகளுக்கு வால் பிடித்து வாழும் ஒரு பிறவி ..சொந்த மகன் (இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ) கூட இத சங்கரியை மதிப்பதில்லை .
எங்கே ..ஒரு நகர சபை தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் இவரால்