பாஸ் கட்சித் தேர்தலில் அப்துல் ஹாடி ஆவாங்கும் துவான் இப்ராகிம் துவான் மான் ஆகிய இருவரும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளைப் போட்டியின்றியே தக்க வைத்துக் கொண்டனர்.
மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கும் போட்டி இருக்கிறது. தலைமைச் செயலாளர் தாகியுடின் ஹசானும் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசானும் அப்பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
ஆனால், நடப்பு உதவித் தலைவர்களான இட்ரிஸ் அஹமட், முகம்மட் அமார் அப்துல்லா, இஸ்கண்டர் சமட் ஆகிய மூவரும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்குப் போதுமான நியமனங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
பாஸ் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் முடிவுக்கு வந்ததை அடுத்து தாகியுடின் பாஸ் இணையத் தளத்தில் இவ்விவரங்களை வெளியிட்டிருந்தார்.