தமிழ்த் தலைமை உறுதியாக இருந்திருந்தால் இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம்: கஜேந்திரகுமார்

gajendran_ponnambalamதமிழ்த் தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால் பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்கும் இலங்கை அரசினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான தீர்மானமேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சி தலைவரின் பணியாகும். ஆனால், இரா.சம்மந்தன் என்ன செய்தார். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவர். அதே மக்களுக்கு நடந்த அழிவுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொறுப்புகூறல் மற்றும் நீதி கிடைப்பதைத் தடுத்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார். தமிழ் மக்களுக்கு 2 தடவைகள் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கப்பெற்றது. இரு தடவையும் வாய்ப்புக்கள் கிடைத்தும் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தாமல் மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்க்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: