இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை; ஐ.நா.வுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடிதம்!

amnesty-international-logoஇலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை குறித்த கடிதத்தில் கோரியுள்ளது. அந்தத் கடிதத்தின் பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மீது அச்சுறுத்தல் விடுக்கும் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளதாகவும், வடக்குப் பகுதியில் இந்த நிலை அதிகமாகக் காணப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

-puthinamnews.com

TAGS: