பொட்டு அம்மான் சென்றது அம்பூலன்ஸ் வண்டியில் தான்: ராணுவ அரணை அவர் உடைக்க முற்பட்டார்

மே மாதம் 18 அன்று 56ம் படைப் பிரிவின் ராணுவ அரண் ஒன்றை உடைத்து செல்ல புலிகள் முற்பட்டார்கள். அங்கே அம்புலன்ஸ் வண்டி ஒன்றும் வந்தது. அதில் தான் பொட்டு அம்மான் இருந்திருக்கவேண்டும் என்று. இலங்கை புலனாய்வு துறையின் தலைவர் கபில ஹெந்த விதாரண தற்போது தெரிவித்துள்ளார். அதிர்வு இணையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்தி ஒன்று தொடர்பாக , கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்கள் சில தமது கருத்தை பதிவு செய்து இருந்தார்கள். அதிர்வு இணையத்தை மேற்கோள் காட்டி குறித்த சிங்கள ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டு வந்தது.

இதனால் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்றும். அவர் இறந்ததாக நான் எப்பொழுதும் தெரிவிக்கவில்லை என்றும் அந்தர் பல்ட்டி அடித்தார் கருணா. இதனை அடுத்து எழுந்த சர்சையை தீர்த்துவைக்க, கபில ஹெந்த விதாரண மற்றும் கோட்டபாய ஆகியோர் களத்தில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மே 18 அன்று மதியம் , நந்திக்கடல் களப்பில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பொட்டு அம்மானை வைத்து புலிகள் அவரை அங்கிருந்து அகற்ற முற்பட்டதாகவும்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அது வெடித்து சிதறிவிட்டதாகவும் கபில தற்போது தெரிவித்துள்ளார். உள்ளே 4 சடலங்கள் இருந்ததாகவும். ஆனால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு சடலம் பெண்ணினது என்றும் தெரிவித்து. மதிவதனி அக்காவின் கதையையும் முடித்துவைத்துள்ளார் கபில். ஆனால் இவர்கள் கூறும் எந்த ஒரு தகவலும் துல்லியமானவை அல்ல என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும். உடல் கிடைக்கவில்லை ஆனால் நிச்சயம் அவர் உயிரோடு இல்லை என்கிறார், கபில.

-athirvu.com

TAGS: