ஜாகிர் நாய்க்குக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி கொடுக்கப்பட்டது “வருந்ததத்தக்கது” எனக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சரை பாஸ் உலாமா தகவல் தலைவர் முகம்மட் கைருடின் அமான் ரசாலி கடிந்து கொண்டார்.
“இஸ்லாத்தைக் குறைகூறும் டிஏபி-இன் அரசியல் பாணியைக் கூட்டரசு அமைச்சர்களும் பின்பற்றுவது கவலை அளிக்கிறது”, என்றாரவர்.
அமைச்சரவை எல்லா விசயங்களிலும் கூட்டாகத்தானே முடிவெடுக்கும். அமைச்சர் குறைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இவ்விவகாரத்தில் கூட்டாக முடிவெடுக்கும் முறை தோற்றுப்போனதாக அல்லவா தெரிகிறது என்றார்.
குறைகூறைய அமைச்சரின் பெயரை கைருடின் குறிப்பிடவில்லை. ஆனால், இவ்விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பிய மஇகா தலைவரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ். சுப்ரமணியதை பாஸ் தொடர்ந்து சாடி வந்துள்ளது.
2013 எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் சுப்ரமணியம் அறியாதிருப்பது எப்படி என்று அது வினவியது.
ம,இ,க பேர்போய்க்கிட்டுயிருக்கிற கட்சி
பேர்போனகட்சி,பாஸ்,பர்காசா கட்சிகளுக்கு
பேர்போன கட்சியை சாடுவதில் சளித்தவர்கள்
அல்ல,தீவிரமதபோகரைப்பற்றிய நிலைப்பாட்டை,மத்திய செயலவையை கூட்டி
அந்த கட்சியின் நிலைப்பாட்டை ஒருமித்த
கருத்தாக திர்மானம் நிறைவேற்றி
பிறதமருக்கு கையளித்திருக்கலாம் வலுசேர்ப்
தாகவும் அமைந்திருக்கும் பாவம் சுப்புடு!