நாளை, ஏப்ரல் 24 2017, மலேசியர்கள் புதிய பேரரசர் அரியணை அமரும் விழாவைக் கண்டுகளிக்கலாம்.
ஐந்தாம் சுல்தான் முகம்மட் நாட்டின் 15-ஆவது பேரரசராக நாளை அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இஸ்தானா நெகராவின் பாலாய் ரோங்ஸ்ரீ-இல் நடைபெறும். இதனை முன்னிட்டு இஸ்தானா நெகரா கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முழு அரசச் சடங்குகளுடன் நடைபெறும் இவ்விழாவில் மாநில ஆட்சியாளர்கள், பிரதமர் தம்பதிகள், அ மைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நாட்டின் பெருமக்கள் முதலானோர் கலந்து கொள்வார்கள்.
பேரரசரின் அரியணை அமரும் விழாவை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.