பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர்.
இவ்வளவு தொகை பாதுகாப்புப் படையினரின் தேவை எங்கிருந்து வந்தது என்று ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது ஜனநாயக விரோத செயல் என்றும் வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கருதினால் பொலிஸாரின் அளவை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-puthinamnews.com
இந்த தெலுங்கர் ஏன் தமிழர் மீது இவ்வளவு அக்கறையாக இருக்கிறார் ?