இலங்கையை வதைக்கும் கடும் வெப்பம்! உருகும் நிலையில் நுவரெலியா!

srilanka_and_indiaகடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக, தெற்காசியா முழுவதும் கடுமையான வெப்பநிலை உணரப்படுவதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சமகாலத்தில் இலங்கை தீவிரமான வெப்ப நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் காணப்படும் வெப்பநிலை, சராசரியிலிருந்து 31 டிகிரி செல்சியஸ் வரை ஏப்ரல் மாதத்தில் உணரப்பட்டுள்ளளது. எனினும் ஈரப்பதமான கடல் காற்று இன்னும் 36 செல்சியஸ் அளவில் உணரப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிக வெப்பநிலை நிலவுகின்ற போதிலும், ஒரு பகுதி வீடுகளில் காற்றுச்சீரமைத்தல் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக இளம் வயதினரும் முதியோர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாடு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியா, தேயிலை வளம் கொண்ட நகரமாகும். இதனை குட்டி இங்கிலாந்து என்று அழைப்பார்கள். ஏனெனில் இந்த நகரத்தின் தட்பவெப்ப நிலை ஐரோப்பா பகுதிகளில் உள்ளதனை போன்று காணப்படும்.

நுவரெலியாவில் பொதுவாக ஏப்ரல் மாத வெப்பநிலை சுமார் 10 முதல் 15 செல்சியஸ் வரை காணப்படும். எனினும் கடந்த புதன்கிழமை மெர்குரி 24 செல்சியஸை அடைந்துள்ளது. அண்மைய நாட்களில் நுவரெலியாவில் 22 செல்சியஸிற்கும் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழையின் ஆரம்பத்திலேயே இந்த வெப்பம் குறைவடையும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: