வன்னியில் ஆதிகாலத் தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் தமிழ் மணி அகளங்களன் தலைமையில் இன்று இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
நாகர் காலத்து தொல்பொருள் சின்னங்கள் போன்றவற்றையும் ஆய்வுக்குட்படுத்திய நூலாக வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு எனும் நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை தமிழ் மணி அகழங்கன் வெளியிட்டு வைக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோதாரலிங்கம் பெற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், பேராசிரியர் சி. பத்மநாதன், ஜே.கோபிநாத், பிரதேச கலாச்சார உதியோகத்தர் பிரதீபன், மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம், சட்டத்தரணிகளான சிற்றம்பலம், கெங்காதரன், மு.பா.உறு. வினோதாரலிங்கம் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு நூல் வெளியீட்டில் கலந்து சிறப்பித்தனர்.
-tamilwin.com