வெள்ளைக் கொடி விவகாரத்தை காட்டிக் கொடுத்த சரத் பொன்சேகாவினால் ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
காலி முகத்திடலில் இடம் பெறும் மேதினக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர்,
நாடு இப்போது சின்னாப்பின்னமாகி விட்டது. வடக்கை விடுதலைப்புலிகளுக்கு சொந்தமாக கொடுத்து விட்டார்கள்.
அதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளையும் இந்தியா, சீனா, அமெரிக்கா என ஒவ்வோர் நாடுகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.
இராணுவத் தரப்பை காட்டிக் கொடுத்துக் கொண்டு ஆட்சி செய்து வருகின்றார்கள். சர்வதேச அடிப்படையில் நாடு இப்போது தனது முக்கியத்துவத்தினை இழந்து விட்டது.
வெள்ளைக் கொடி விவகாரத்தில் காட்டிக் கொடுத்து பிரச்சினைகளை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவை கொண்டு எம்மை அடக்கலாம் என நினைக்கின்றார்கள்.
ஆனால் அது சாத்தியம் அல்ல. மக்கள் இப்போது எழுச்சி பெற்றுள்ளார்கள். குண்டுகளைக் கொண்டு அவர்களை அடக்க முடியாது. எத்தனை பேரை அவர்களால் சுட்டு வீழ்த்த முடியும்.
இந்த துரோகத்தனமான ஆட்சியை அனைவரும் ஒன்று திரண்டு வீழ்த்துவோம். ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். மகிந்த தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைப்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.
அனைவரும் வீதிக்கு இறங்கி எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியை இந்த வருடத்திற்குள் வீட்டுக்கு அனுப்பி விடலாம் எனவும் கம்மன்பில தெரிவித்தார்.
-tamilwin.com