பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) ஸக்கீருக்கு மலேசிய அரசு வழங்கிய நிரந்தர தங்கும் சிறப்புரிமை (பிஆர்) பற்றி ஐநா பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவுக்கு (சிடிசி) புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதற்கு சவால் விடும் வகையில் மலாய்க்காரர் உரிமைகளுக்காக போராடும் அமைப்பான பெர்காசாவும் சிடிசிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஹிண்ட்ராப்பின் கடிதம் மலேசியாவின் தோற்றத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார்.
வேதமூர்த்தியின் கடிதத்தில் பல அடிப்படையற்றவை கூறப்பட்டுள்ளன. ஆகவே, ஸக்கீரை தற்காப்பதற்கு மட்டுமில்லாமல் நாட்டின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்காக தாம் அக்கடிதத்திற்கு பதில் அளிப்பதாக இப்ராகிம் அலி கூறினார்.
வேதமூர்த்தி அவரது கடிதத்தில் கூறிகொண்டவற்றில் மலேசியாவுக்கு ஏதோ பங்கு இருப்பது போலவும், மலேசியா ஒரு பொறுப்பற்ற நாடு போலவும் அதனால் மலேசியாவிலுள்ள முஸ்லிம்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டவற்றில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதாகவும் அறியமுடிகிறது என்று இப்ராகிம் அலி கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி சிடிசிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மலேசியா ஒரு சிடிசி உறுப்பினராக இருப்பதால் ஸக்கீரால் ஏற்படவிருக்கும் “ஆபத்துகள்” குறித்து சிடிசி மலேசியாவுக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனிடையே, தாம் இந்த எதிரான கடிதத்தை அனுப்பியது ஹிண்ட்ராப்புடன் சச்சரவில் இறங்க வேண்டும் என்பதற்காக அல்ல என்று அலி கூறினார்.
“அவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் என்பதால், நானும் கூட, உண்மையைத் தற்காப்பதற்காக, ஒரு கடிதம் எழுத முடிவு செய்தேன்” என்று அலி மேலும் கூறினார்.
ஐநாவுக்கு அனுப்பியுள்ள இப்ராகிம் அலியின் கடிதத்தின் நகல் பிரதமர் நஜிப், உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடி, வெளிவிவாகார அமைச்சர் அனிஃபா அமன், போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார், இந்திய ஹைகமிஷனர் டி.எஸ். மூர்த்தி மற்றும் பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்கும் உங்கள் கடிதத்தை வெளியிட்டால் உங்களை நம்புவோம்! நீங்கள் நம்புவதற்கான ஆளில்லையே!
ஹிண்ட்ராப்பின் கடிதம் மலேசியாவின் தோற்றத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம் கூறுவது பெர்காசா எருமை.
ஒரு முஸ்லீம் நாடான பங்களாதேஷ் தீவிரவாதி/பயங்கரவாதி என குறிப்பிடுவரை, மற்றொரு முஸ்லீம் நாடான மலேசியா மத போதகர் என தற்காப்பது மலேசியாவின் தோற்றத்திற்கு பெருமையா என்றெல்லாம் கேட்க கூடாது.
உண்மையான முஸ்லீம் நாடு பங்களாதேஷா ? மலேசியாவா ?
இந்த நீர் தவளை நாட்டுக்கே ஒரு அவமான சின்னம்.இவனையெல்லாம் வெளியே நடமாட விட்டு வேடிக்கை பார்க்கிறது இனவாத அரசாங்கம்.
அன்று வந்த தமிழன் / இந்தியன் காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான் !
பிறகு வந்த தமிழன் / இந்தியன் அறிவு கல்வி கற்றுத்தந்து மரத்தில் இருந்தவர்களை இறக்கி விட்டான் !
இன்றும் தமிழன் தான் ( ஜாகிர் ) மத போதகராக ஏற்றுக்கொள்ளப் படுகிறான் ! அப்படினா , இந்தியன் இல்லாம இவனுங்களால் தனித்து வாழமுடியாது என்றுதானே அர்த்தம் ?? என்றைக்கும் நாம மூடித்தான் – இவங்க ஜாடிதான்! மேன் மக்கள் மேன் மக்களே என்று எடுத்துக்கொள்வோமே !!
இப்ராகிம் அலிதவளை UNனுக்கு அனுப்பியத
ன் நகலை பங்களாதேஷ் பிரதமருக்கும்,இந்திய பிரதமருக்கு.(ZNஇந்திய
பிரஜை)கனடா,அமெரிக்கா,பரிட்டனுக்கும் அனுப்பிவையுங்கள்,ZNமுஸ்லிம்தமிழன்,
மலாய் மொழி தெரியுமா?ZNக்மதபோதனை
களைஆங்கிலபுலமையில் பேசுவதை இங்குள்ள இப்ராகிம் அலிபுரிந்து
கொள்கிறாரா?எதுஎப்டியோ தமிழ் வளருது!
பண்பாடு அற்ற நாதேரி பேசுது. ம இ கா பெருச்சாளிகள் எங்கே போனது உங்கள் வீரம்?
ம இ கா பெருச்சாளிகள் நஜிப்பின் இந்தியன் blue பிரிண்ட் பற்றி பெருமை அடித்து கொண்டிருப்பதற்கே நேரம் போதவில்லை. வீரத்திற்கு எங்கேய நேரம் இருக்க போவுது.
S.S.Rajulla
யாப் ஆஹ் லோய் என்று ஒருவர் கோலாலம்பூரில் வசித்ததே கிடையாது என்று இன்றைய வரலாறு கூறும்போது,
தமிழன் வந்தான், காட்டை அழித்தான், ரோடு போட்டான், தண்டவாளம் அமைத்தான் என்பதெல்லாம் கட்டுக்கதையாகி விடும் இன்றைய தலைமுறையினரிடம்.