இலங்கைக்கு அழுத்தம்? அமெரிக்கப் பிரதிநிதி இலங்கை செல்கிறார்!

us-resolution-against-sri-lankaஅமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் பில் ஜோன்சன் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் பில் ஜோன்சனுக்கும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் பின்னர் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தனது டுவிட்டர் பக்கத்தில் இ்ந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எனினும், அவர் எப்பொழுது இலங்கைக்கு பயணம் செய்வார் என்னும் விடயம் குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனிதவுரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கடுமையான முறையில் கவனம் செலுத்திவருகிறது.

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் இன்னமும் மேலோங்க வேண்டும் என்றும், அதற்கு அரசாங்கம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது அவர் இலங்கையின் முன்னேற்றம், மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் இவர் இலங்கைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை, இலங்கை அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதவுரிமைகள் தொடர்பிலும், நல்லிணக்கம் தொடர்பிலும் இலங்கைக்கு அவர் அழுத்தங்களைக் கொடுக்கலாம் என மேற்கத்தேய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

-tamilwin.com

TAGS: