புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளில் அரசாங்கம் இழுத்தடிப்பினை செய்து வந்த நிலையில், இப்போது அந்தப் பணிகளிலிருந்தும் பின்வாங்கும் நிலை காணப்படுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் அதிகளவான பெரும்பான்மையினர் கலந்துக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, நாட்டிற்கு ஆபத்தான அரசியலமைப்பிற்கு ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியின் பேரணி குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளிலிருந்து பின்வாங்கும் நிலை ஏற்படும்”என்றுள்ளார்.
-puthinamnews.com