மட்டக்களப்பு செங்கலடியில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யோகேந்திரன் ரமணி என்ற ஆறு வயது குழந்தையின் தாய் ஒருவரே நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.
-tamilwin.com


























