தமிழ் மக்களை பொறுத்தவரை எல்லாம் ஒரே ஆட்சிதான் இங்கு முன்னைய ஆட்சி நல்லாட்சி என்ற வேறுபாடில்லை எல்லா ஆட்சியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஒரே மாதிரியே அனுகப்படுகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்தும் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரணைமாதாநகரில் ஏழாவது நாளாகவும் கவனயீர்ப்பில் ஈடுப்படும் மக்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆங்கு அவர் மேலும்தெரிவிக்கையில்.
இரணைத்தீவு மக்கள் தங்களது சொந்த நிலங்களுக்கு செல்வதற்கான தார்மீக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் இரணைத்தீவு மக்களை தங்களின் பூர்வீக வளமிக்க நிலத்திலிருந்து இடம்பெயரச் செய்தது. ஆனால் யுத்தம் முடிந்து எட்டு வருடங்கள் ஆகின்ற போது போதும் இன்னும் அந்த மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு மீளத்திரும்ப முடியாதிருப்பது கவலைக்குரியதே.
இரணைத்தீவு மக்களின் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை தெரிவிக்கும் வகையில் நேரில் சந்தித்துள்ளேன். மக்களின் போராட்டம் வெல்ல வேண்டும் அதுவரை அவர்களின் தங்களின் போராட்டத்தை தொடரவேண்டும் அதில் மக்களும் உறுதுpயாக இருக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர்
இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான கோரிக்கைகளை மீள்குடியேற்ற காலம் தொடக்கம் அனைத்து தரப்பினர்களிடமும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் அரசியல் மற்றும் அதிகார தரப்பினர்களின் மீது நம்பிக்கையிழந்து நிலையில் தங்களின் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் பொருட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய சூழலில் வடக்கு கிழக்கில் மக்கள் தங்களின் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் பொருட்டு போரட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் தாங்கள் நம்பிக்கையோடு தெரிவுசெய்திருந்த பிரதிநிதிகளில் நம்பிக்கையிழந்த நிலையில்தான் இன்று எமது பிரதேசம் மக்கள் போராட்டங்கள் நிறைந்த பிரதேசமாக காணப்படுகிறது.
அதனடிப்படையில்தான் இரணைத்தீவு மக்களின் போராட்டமும். இந்த போராட்டத்தின் போது அவ்வப்போது வருகைதந்து வாக்குறுதி வழங்குகின்றவர்களை நம்பாது கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே மக்களின் இந்தப் போராட்டத்தை நான் ஆதரிக்கின்றேன் அவர்களுக்கு பக்கபலமாக நிற்பேன் எனவும் தெரிவித்த சந்திரகுமார்
இரணைத்தீவு மக்கள் தற்போது வாழ்கின்ற இரணைமாதாநகரில் பல்வேறு பணிகளை நான் பொறுப்பில் இருந்த காலத்தில் மேற்கொண்டிருக்கின்றேன். வாழ்வாதாரம், பிரதேச உட்கட்டமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கின்றேன்.
அதனை இந்த மக்கள் இப்போதும் நன்றியோடு தெரிவிக்கின்றனர். ஆந்தக் காலத்திலும் இரணைத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. ஆதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன ஆனால் அந்தக் காலக்கட்டத்திலும் இரணைத்தீவுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை எனவே கடந்த அரசு செய்யவில்லை என்பதை காட்டி இந்த அரசும் செய்யாமல் இருக்க முடியாது. நல்லாட்சி அரசை கொண்டு வந்தால் மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் எனக் கூறியவர்கள் ஒன்றும் பெற்றுக்கொடுக்காத சூழலில்தான் நல்லாட்சியில் மக்களுடன் நாங்களும் சேர்ந்து போராடுகின்றோம். தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சி பின்னைய ஆட்சி என்ற வேறுபாடு இல்லை எல்லாம் ஒரே வகையான ஆட்சியாகதான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
– எஸ்.என்.நிபோஜன்
-tamilcnn.lk