தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் வலுவடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது பொதுமக்களால் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக, கடந்தவாரம் நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மனித உரிமை விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தொடர்பாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-puthinappalakai.net