மோடியின் விஜயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் திருப்பு முனையாக அமையுமா?

maithri-modi-300x199கௌதம புத்தரினால் பரப்பப்பட்ட புத்த சமயத்தின் வெசாக்தினத்தையும் இந்தியாவின் பிரதமர் மோடியின் விஜயமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைய நல்லாட்சி அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஸ்கரா அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சி அரசாங்கம் காணமல் போனோர் விடயத்தில் நல்லதோர் முடிவெடுக்க வேண்டிய இறுதி நேரம் இதுவாகும்.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தபின் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இராணுவத்துடன் கையளித்து இன்று வரையும் இருப்புத் தெரியாது 80வது நாட்களுக்கு மேலாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நியாயமான கோரிக்கைக்கு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இதுதான்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதிக் கட்டத்தில் தமது போராட்டத்தை வேறு திசையை நோக்கி நகர்த்த வேண்டிய தேவையை ஆணித்தனமாக தெரிவித்திருந்தார்கள்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் உலக அரங்கில் அவப்பெயரையும் உலக நாடுகளின் ஐ.நாடுகள் சபையின் அவப்பெயருக்கும் உட்படாமல் ஜனாதிபதியோ பிரதம மந்திரியோ பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டிய இறுதிக் கட்டமாகும்.

காணாமல் போனோர் பிரச்சினை என்பது இலங்கை அரசிற்கு கடினமானது என்பது தெரிந்த உண்மைதான்.

என்றாலும் கூட பிரச்சினைகள் ஒருவரையறையை மீறி உடன் கையாளப்பட வேண்டும். இது இன்றியமையாத ஒன்றாகும்.

பலர் காணாமல் போனதும் இன்னும் பலர் மறைமுக முகாங்களிலும் இன்னும் சிலர் வேறுபல இடங்களிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பது பலமுறை தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும்.

இது உரிய முறையில் கையாளப்படவேண்டும். சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு காணிப்பத்திரம் கிடைக்க ஆவணம் செய்யப்படவேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: