சீனாவுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சீன அரசு அதற்கு சொந்தமான நீர்முழ்கி கப்பலை அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், சீன அரசு தங்களிடம் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கோரியிருந்தது. இது ஒரு சிக்கலான விவகாரம் என்பதால் நாங்கள் அதை மறுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
இதே போன்று கடந்த 2014-ஆம் ஆண்டு சீனா தனது நீர்முழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி கேட்டது. அப்போதைய இலங்கை அரசு அதற்கு அனுமதி அளித்தது.
இந்த செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த இந்தியா, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கவலை தெரிவித்ததிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com