அமெரிக்க காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வில் ஜோன்சன் மற்றும் வட மாகாண முதலமைச்சர சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ஜெனிவா தீர்மானம் மற்றும் சம காலத்தில் வடமாகாண மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-tamilwin.com