முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பெயர்கள்? பொலிஸாரின் விசாரணையில் அருட்தந்தை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார்விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அருட்தந்தை இன்று (08) இரவு எட்டு மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக நினைவு படிம கற்கள் பொறிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த கற்களில் பொறிக்கப்படும் பெயர்களில் விடுதலைப்புலிகளின் பெயர்களும் உள்ளதா? மற்றும் எதற்காக பெயர்கள் பொறிக்கப்படுகின்றன போன்ற விடயங்களை ஆராயும் நோக்குடனே முல்லைத்தீவு பொலிஸார் அருட்தந்தை எழிலை விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு அருட்தந்தை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: