சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அது பற்றி பார்ப்போம்,
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,
- இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்
- வறண்ட சருமம் சரியாகும்.
- வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.
- சருமம் அழகாக இருக்கும்.
சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்
பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்,
- சருமம் மென்மையாக மாறும்.
- பார்வைத்திறனும் மேம்படும்.
- சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
- வெடித்த உதடு அழகாக மாறும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்,
- இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.
- சோர்வு நீங்கும்.
- பொலிவான சருமமாக மாறும்.
- குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.
வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால், முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.
தூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.
சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.
கடுகு எண்ணெய்
தூங்கும் முன் கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால், வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.
தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வறண்ட மற்றும் சிவப்பான கண்கள்கூடச் சரியாகும்.
உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்.
-lankasri.com