சமீபத்தில் மான்சென்ஸ்டர் நகரில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தமாக நேற்று மூன்று மலேசிய மாணவர்களை மான்செஸ்டர் மாநகர் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
மான்செஸ்டர், லோங்சைட் போலீஸ் நிலையத்திற்கு அம்மாணவர்கள் மாலை மணி 5.40க்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் விசாரணைக்குப் பின்னர் இரவு மணி 9 க்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் விஸ்மா புத்ரா கூறியது.
இத்தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மொத்தம் 23 பேர், குழந்தைகள் உட்பட, கொல்லப்பட்டனர் மற்றும் 116 பேர் காயமுற்றனர். இதை நடத்தியவர் பிரிட்டீஷ் குடிமகன் சால்மன் ரமதான் அபிடி.
இதனிடையே, மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் சிலர் இன்னும் அகப்படாமல் இருக்கின்றனர் என்று போலீசார் கூறினர்.
மான்செஸ்டர் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் சம்பந்தபட வில்லையே என நாடே நிம்மதியாக இருந்த நேரத்தில், மலேசிய மாணவர்கள் என்ற பெயரில் அந்த நிம்மதிக்கும் வச்சுட்டாங்கையா ஆப்பு.
இதற்கும் துணை பிரதமர் ஹமீடி இந்த மலேசிய மாணவர்களும் இஸ்லாமிய சமய அறிவு இல்லாதவர்கள் என்று கூறி புனித நோன்பு மாத நகைச்சுவையை தொடர மாட்டார் என்று நம்புவோம்.
எது எப்படியோ, அமெரிக்காவின் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் முதல் இன்றுவரை நடைபெறும் அனைத்துலக பயங்கரவாத தாக்குதல்கள் வரை மற்றும் இனிவரும் காலங்களில் நடைபெறவிருக்கும் அனைத்துலக பயங்கரவாத தாக்குதல்களிலும் மலேசியர்களின் பங்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தது எனபதை மீண்டும் மீண்டும் உலகுக்கு நிரூபித்து வருகிறார்கள் .
சபாஷ் MALAYSIA BOLEH