ஜெனிவாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!

genevaஇலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமைவிவாதம் நடைபெறவுள்ளது.

இதற்கான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ளமஹிந்த அணி கொண்டு வரவுள்ளது. பிரேரணை மீதான விவாதத்தை தினேஷ் குணவர்தன எம்.பி.ஆரம்பித்து வைத்து உரையாற்றுவார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில்நடைபெற்றது. இதன்போது 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலுள்ள விடயங்களைஅமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

மேற்படி தீர்மானம் தொடர்பில் 2017 ஏப்ரல் மாதம் 7ம் திகதி இலங்கைநாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய பிரேரணையை மஹிந்த அணி கொண்டு வந்திருந்தது.

எனினும், விவாதம் நடைபெறும் தினத்தன்று 52 உறுப்பினர்களைக் கொண்ட பொதுஎதிரணியான மஹிந்த அணிக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு குறைந்த நேரமேஒதுக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி நேர ஒதுக்கீடு பற்றி சபையில் மஹிந்தஅணி சர்ச்சையைக் கிளப்பியதால் அமளி துமளி ஏற்பட்டது.

இதையடுத்து சபைநடவடிக்கைகள் மறுநாள் வரை ஒத்தி வைக்கப்பட்டன. இதனால், ஜெனிவாத் தீர்மானம்குறித்த விவாதமும் பிற்போடப்பட்டது. அந்த விவாதமே இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பில்எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது.

அதேவேளை, போரால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூருவதற்குப் பொதுவானதொருநாளை ஒதுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதமும் வெள்ளிக்கிழமைநடைபெறவுள்ளது.

-tamilwin.com

TAGS: