பிரபாகரன் மீண்டும் வந்தாலே நன்று : புலிகளின் தலைவரை அழைக்கும் தேரர்

prabhakaran01எதிர்காலத்தில் நாட்டிற்கு நல்லது செய்ய பிரபாகரன் போன்ற ஒருவரை தான் கொண்டு வர வேண்டும் என்றால் அதனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இதனை கூறியுள்ளார். மேலும்,

நான் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை யுத்தம் தொடர்பிலும், விடுதலைப்புலிகள் தொடர்பிலும் நன்றாக அறிந்தவன். அப்போது பல விகாரைகள் அமைப்பதற்கு விடுதலைப் புலிகளிடம் உதவிகளையும் பெற்றுள்ளேன்.

அவர்களிடம் இன ஒற்றுமைகள் சார்ந்த விடயங்களை பேசினேன், அப்போது எவரும் குறை கூறவில்லை. ஆனால் இன்று பல தமிழ் அரசியல்வாதிகள் என்னை இனவாதியாக சித்தரிக்கின்றனர்.

யுத்தத்தின் போது சுமார் 2000 தமிழ், சிங்கள மக்கள் கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்து சென்றனர். அவர்களுக்கு இன்றும் காணிகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் நான் விவாதித்த போது இனவாதியாக குற்றம் சுமத்தினார்கள்.

பிரபாகரன் இருந்த காலத்தில் இல்லாதவாறு இப்போது அரசியல் இலாபங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் நாட்டின் சுபீட்சத்திற்கு பிரபாகரனே மீண்டும் வர வேண்டும் என்றால் அதனையும் சிந்திக்க வேண்டும்.

காரணம் அப்போது எவரும் மக்களை ஏமாற்றி தமது இலாபங்களை நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இறந்தவர்களைப் பற்றி பேசி பொய்யாக சண்டை போட்டுக் கொண்டு தமது இலாபங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.

இப்படியான நிலையினைப் பார்க்கும் போது பிரபாகரன் இருந்தாலே நன்று என்றே சிந்திக்கத்தோன்றும் எனவும் சுமனரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: