டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மெசேஜ் செய்வதற்காக பேஸ்புக், டாக்(Talk) என்னும் புதிய செயலி வரவுள்ளது.
உலகளவில் பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும், டீன்ஏஜ் சிறுவர்களும் பேஸ்புக்கில் மூழ்கி கிடக்கும் இந்த சூழலில், ஓன்லைன் மேசேஜ் மூலம் தவறான நபர்களிடம் பழகி அவர்கள் வாழ்க்கையே வீணாகும் நிலை ஏற்படுகிறது.
இதிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க டாக் (Talk) என்ற புதிய செயலி வெளிவரவுள்ளது.
இதன் மூலம் பெற்றோர்கள், தங்கள் டீன்ஏஜ் பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள் மற்றும் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்.
மேலும், யாராவது தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது இதன்மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்றால் தானாக அந்த செயலி செயல் இழந்துவிடும்.
முக்கியமாக 13 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com