இலங்கையில் தொடரும் சித்திரவதைகள், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்தில் முன்வைக்கப்படவுள்ள குறித்த அறிக்கையை ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் இருவர் தயாரித்துள்ளதாக ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னரே ஐ.நா. விசேட பிரதிநிதிகள் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஐ.நா.வின் சுயாதீன நீதித்துறை நிபுணர் மொனிகா பின்டோ, மற்றும் சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான நிபுணர் ஹுவான் ஈ. மெந்தோஸ் ஆகியோர் இலங்கையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
மேலும், இவர்களின் அறிக்கை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே ஆணையத்தின் அங்கத்தவர்களான 47 நாடுகளின் பிரதிநிதிகள் அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
-tamilwin.com