சீன மழலையர் பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 59 பேர் படுகாயம்

india_china_map_20121022சீனாவில் உள்ள மழைலையர் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில், மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணியளவில் பள்ளியின் நுழைவு வாயிலில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.

இதில் 7 பேர் பலியாகி உள்ளதாகவும், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சீனா பொலிசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பள்ளியை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-lankasri.com

TAGS: