சிறுபான்மையினராகிய தமிழரின் முக்கியமான பிரச்சினையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில கைதுகள், நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் துன்புறுத்தல்கள் காணப்படுகின்றன.
இவற்றை நிறுத்தாமல் நிலைமாறு கால நீதி தொடர்பில் நாம் பேச முடியாது என மனித உரிமைகள் சட்டத்தரணி டொமினிக் பிரேமானந்தா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 35ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான கள நிலவரம் தொடர்பில் லங்காசிறி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com