காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் திருத்தச் சட்டமூலம் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்தில், செயலகத்தினால், எவருக்கும் தண்டனை வழங்க முடியாது.
மேலும் செயலகத்தில் வழங்கப்படும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் செல்லுப்படியாகாது.
ஒருவர் காணாமல் போயிருப்பதாக செயலகத்தில் முறைப்பாடு செய்தால், அது குறித்து விசாரணை நடத்தி முடியும் வரை அந்த நபருக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படாவிட்டால், அது தொடர்பில் சான்றிதழை வழங்கும் அதிகாரம் செயலகத்திற்கு உள்ளது.
அத்துடன் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஒருவர் கேட்டுக்கொண்டால், செயலகம் அதனை வெளியிடாது போன்ற தீர்மானங்கள் உள்ளடங்கியுள்ளன.
இதேவேளை, காணாமல் போனோர் சம்பந்தமான செயலகம் குறித்த சட்டமூலத்தில் துரிதமான திருத்தங்களை மேற்கொள்ளாது தாமதப்படுத்தி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தச்சட்டத்திற்கு அமைய செயலகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாமல் இருப்பது குறைப்பாடு என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனோர் தொடர்பாக அறிய செயலகம் ஒன்றை ஸ்தாபிப்பதாக அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் உறுதியளித்திருந்தது.
-tamilwin.com