செபராங் பிறை போலிடெக்னிக் (பிஎஸ்பி) கல்லூரியின் கேண்டீனில் இந்திய உணவுகளை விற்பவர் அத்தொழிலைத் தொடர்ந்து செய்ய விரும்பினால் இஸ்லாத்துக்கு மதம் மாற வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுவதை அக்கல்லூரி நிர்வாகம் மறுத்தது என பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் எம்.பிரகாஷ் கூறினார்.
பிரகாஷ், தாம் பிஎஸ்பி இயக்குனர் சுல்கிப்ளி அரிப்பினைச் சந்தித்ததாக தெரிவித்தார். சுல்கிப்ளி, கேண்டீனில் இந்திய உணவுகளை விற்பனை செய்யும் கோபி கிருஷ்ணன் கோபால் கூறுவதை மறுப்பதாகவும் அவர் சொன்னார்.
கோபி கிருஷ்ணன் பிஎஸ்பி கேண்டீனில் உணவு விற்பனை செய்வது நிறுத்தப்பட்டதற்கு இனப்பாகுபாடுதான் காரணம் என்பதை பிரகாஷ் ஏற்கவில்லை. நிர்வாகக் காரணங்களால்தான் அது நிறுத்தப்பட்டதாக கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறியதையே பிரகாஷும் எடுத்துரைத்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது பிஎஸ்பி பதிலளிக்கவில்லை. அதன் பொது உறவுத்துறைக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் பதிலில்லை.
“இந்திய உணவு விற்பனையாளரிடம் ஹலால் சான்றிதழ் பெறுமாறு கூறப்பட்டிருந்தது. பத்து மாதங்கள் ஆகியும் அவர் இன்னும் சான்றிதழ் பெறவில்லை”, என பிரகாஷ் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.
கல்விக்கழகங்களில் உணவு விற்பவர்கள் ஹலால் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பது கல்வி அமைச்சின் விதிமுறையாகும் என்றாரவர்.
கோபி கிருஷ்ணன் மட்டுமல்ல ,, அந்த கேண்டீனில் உணவு விற்பனை செய்யும் 12 பேரும் இந்த நிபந்தனையைப் பின்பற்றியாக வேண்டும்.
இந்த விவகாரத்தை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள சுல்கிப்ளி தயாராக உள்ளார் என்று கூறிய பிரகாஷ், கோபி ஹலால் சான்றிதழ் பெற உதவவும் அவர் தயார் என்றார்.
” அந்த இனத்திற்கு ” சட்டம் தளர்வாகிவிடுகிறது அல்லது கண்டும்காணாமல் போய்விடுகிறது ! நம் இனத்தவர்களின் கழுத்தை நெரித்துவிடுகிறது . கொடுமை என்னவென்றால் நம் இனத்தவனே நம்மைக்கொல்ல ” அவனோடு ” துணைபோவதுதான் , வெட்கக்கேடு !
என்று இந்த நாதாரிகள் உண்மையை ஒப்புகொண்டிருக்கிறாங்கள்?
இம்மாதிரியான இனபாகுபாடு அந்த இடத்தில் மட்டுமல்ல.நாடெங்கிலும் நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமா நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இங்கு கோபி கிருஷ்ணன் அவர்கள் கொஞ்சம் துணிந்ததால் அந்த வண்டவாளம் தண்டவவாளத்தில் ஏறியது.எதிர்கட்சி ஆளும் மாநிலத்திலேயே இப்படி என்றால் அம்னோ ஆளும் மாநிலங்களில் நிலமையை என்னவென்று சொல்வது? நக்கி ராராயணாதான்.
மதம் மாற அழுத்தம் மே 13 நடந்த பின் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது பேயாட்டம் ஆடுகிறது. 70 ல் அப்பட்டமாகவே அழுத்தம் கொடுக்கப்பட்டது. இன்று என்ன நடக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும் ஆனால் தெரியாது– இல்லாமலா அரை வேக்காடு மலாய்க்காரன் எல்லா இடங்களிலும் உட்கார்ந்து தலைமையில் இருக்கிறான்? இது முக்கியமாக்கப்பட்டது 1981 ல் நம்ம காக்காத்திமிர் பதவியில் ஏறியதும்.