புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை என்று அஸ்கிரிய பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய ஆராய்ந்துள்ள பௌத்த சங்க சம்மேளனங்கள் தீர்மானித்துள்ளன.
புதிய அரசியலமைப்பினை தமது எதிர்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்தினால், அனைத்து பௌத்த பீடங்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 06ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே பௌத்த சங்க சம்மேளனங்கள் மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளன.
-puthinamnews.com

























