விக்கியை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோரை தமிழிசை நேற்று சந்தித்திருந்தார்.

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள இவர், நாளை இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

-lankasri.com

TAGS: