புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும். அதற்காக பொது வாக்கெடுப்பை நடத்துவதே சிறந்தது’ என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் எதிராகவுள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சம்பந்தன்

tna_colombo_1புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பீடங்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமாகும் என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறுபிள்ளைத்தனமாக எம்மை வசைபாடி வருகின்றனர். அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

தமிழ்த் தலைமைகள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டிருந்தால், அது கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு சாதகமாகிவிடும். புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: