யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 24 வயதான இளைஞர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நேற்றைய தினம் மணற்காட்டு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்தக் குழு பருத்தித்துறை பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கட்டளையை மீறி மணல் லொறியை செலுத்திய இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் தமது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்கள் என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com
உடனே இந்தியா, தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று ஆணித்தரமாக சொல்லுமே.பாவம் ஈழ மக்கள் இந்தியாவை நம்பி நம்பி ஏமாந்தார்கள் ,செத்தார்கள்.தமிழ் நாட்டு மக்களுக்கு இது பிரச்சனையே இல்லை.உலக தமிழர்கள் வாயில் கையை வைத்து வேடிக்கை தான் பார்க்கதான் வேண்டுமா?