ஒற்றுமையே பலம்; மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை: விக்னேஸ்வரன்

vigneswaran“ஒற்றுமையே பலம். மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெலி வைற்றிங், வடக்கு மாகாண முதலமைச்சரை, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைவது சிறந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தலைமை அவசியமென்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?” என்று முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது பதிலளித்த முதலமைச்சர், “மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைக்கும் இடமில்லை.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: