புலிகளின் தலைவர் பற்றி பிளேக் மீண்டும் பரபரப்பான தகவல்!

praaஇலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை காப்பாற்றுவதற்கு தாம் ஒருபோதுமே முயற்சிக்கவில்லை என மீண்டும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அதுதவிர விடுதலைப் புலிகளின் கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் அடியோடு நிராகரித்துள்ளதோடு அந்த கப்பல்களின் நிலைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை இலங்கைக் கடற்படையினருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்தியை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதன்படி,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்பதற்காக யுத்தம் நடந்த இடத்தில் இடம்பெயர்ந்த மக்களை புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற்ற முயற்சித்ததாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மைகளும் இல்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளுக்கு உதவும் எவ்வித நோக்கமும் இருக்கவில்லை.

ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் காலப் பகுதியில் நான் தான் இலங்கையில் தூதுவராக கடமையாற்றியிருந்தேன். காலத்திற்கு காலம் வெளியாகி வரும் பிழையான தகவல்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: