எம்ஆர்டி பெருஞ் செலவில் அமைந்த திட்டமாக இருக்கலாம் ஆனால், அது மக்களுக்கான திட்டம் என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்.
51 கிலோமீட்டர் நீளம் கொண்ட எம்ஆர்டி சுங்கை பூலோ – காஜாங் சேவையினால் நாள்தோறும் 400,000 பயணிகள் பயனுறுவர் என அமைச்சர் அவரது வலைத்தள்மான sskeruak.blogspot.my-இல் பதிவிட்டிருந்தார்.
தன்னுடன் ஒத்துப்போகாத ஒரு மாநிலம் என்றாலும் அரசாங்கம் அம்மாநிலத்தில் இத்திட்டத்தை மேற்கொண்டது அது மக்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்கு நல்ல சான்றாகும் என்றாரவர்.