இலங்கையில் பொறுப்புணர்வு தேவைப்படுவதாக கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கறுப்பு ஜுலையை நினைவுபடுத்தும் உரையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
1983ஆம் ஆண்டு ஜுலை 24 முதல் 29ஆம் திகதி இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் எண்ணற்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.
இன்று, கறுப்பு ஜுலையின் 34 வது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக, தமிழர்கள் மற்றும் தமிழ் சமூகத்தின் உறுப்பினர்களுடன் நாம் ஒன்று சேரவுள்ளோம்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, பாதிக்கப்பட்ட அனைவரின் காயங்களையும் குணப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் நீண்ட கால சமாதானத்தை அடைய சர்வதேச முயற்சிகளை கனடா வரவேற்றுள்ளது, ஆனால் இந்த யுத்தத்தின் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையும், பொறுப்புணர்வு செயற்பாட்டையும் ஸ்தாபிப்பதற்கான தேவையை மீண்டும் கனேடிய பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கனடா அரசாங்கத்தின் சார்பில், இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் ஆதரவை தெரிவித்து கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.