நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் செல்லும் நபர் இவர் தான். இவர் கண்டி வீதியூடாக செல்லும் போது அங்கே இருந்த CCTV கமரா ஒன்றில் இவரது உருவம் பதிவாகியுள்ளது. பொலிசார் நடத்திய அதி தீவிர வேட்டையில் தற்போது இவர் தப்பிச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ கைப்பற்றப்பட்டுள்ளது என அதிர்வின் யாழ் புலனாய்வு நிருபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய சினிமா பட பாணியில் “இளஞ்செய்ழியன் மீது ஒரு சன்னம் பட்டிருந்தால்” என்று கட்டுரைகள் பல செய்திகளை பல இணையங்கள் வெளியிட்டுகொண்டு இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன என்பதனை நாம் ஏற்கனவே வெளியிட்டு விட்டோம். வீட்டில் அம்மாவோடு சண்டையிட்டு. பின்னர் நன்றாக குடித்துவிட்டு தனக்கு காசு தரவேண்டிய பழக் கடை உரிமையாளரோடு ஒரு நபர் சர்சையில் ஈடுபட்டுகொண்டிந்தார். அந்த வேளை அங்கே வந்த இளஞ்செழியன் என்ன என்று விசாரியுங்கள் என்று கேட்டது மட்டுமல்லாது வாகனத்தில் இருந்து இறங்கி பஞ்சாயத்து செய்யவும் முற்பட்டுள்ளார்.
பொலிசார் உஷராக இல்லை. குறித்த குடிகாரன் பொலிசாரின் துப்பாக்கியை பிடுங்கி மது போதையில் அங்கே இங்கே என்று சுட்டு விட்டு. இறுத்தியா பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி விட்டான். தற்போது இளஞ்செழியனை வைத்து பல மீடியாக்கள் கதை ஓட்டுகிறார்கள். அது போக கட்டுரை எழுதுகிறார்கள். ஒரு சன்னம் பட்டிருந்தால் உலகையே அழித்திரும்போம் என்கிறார்கள் சிலர். அப்ப முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் ஆயிரக்கணக்கில் மடியும் போது இவர்கள் எல்லாரும் எங்கே இருந்தார்கள் ?
இளஞ்செழியனை சுட்ட நபருக்கு 2 மனைவிமார்: ஆனால் அவரை பிடிப்பது கஷ்டமான விடையம்
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் மீது தாக்குதல் நடத்தியவர் பெயர் ஜெயந்தன் என்றும். இவர் 2 முறை மணம் முடித்தவர் என்றும் அறியப்படுகிறது. ஒரு மனைவி மண் கும்பானிலும், மற்றைய மனைவி புங்குடு தீவிலும் வசித்து வருகிறார்கள். இவர் விடுதலைப் புலிகளின் துணைப் படையில் இருந்தவர் என்றும். வன்னி மாவட்டத்தை கரைத்து குடித்த ஆள் என்றும் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று. அவர் நிறை வெறியில் இருந்துள்ளார்.
இருப்பினும் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் தப்பிச் சென்ற அவரை பிடிப்பது என்பது சிங்கள பொலிசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று விடையம் அறிந்த வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள். ஏன் எனில் அவர் தற்போது வன்னிக் காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சண்டையிட்ட பழக் கடைக்காரர், இவரது 2 மனைவிகள் என்று பலரை பொலிசார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.
தப்பி ஓடும் வேளை அவர் வேண்டும் என்றே துப்பாக்கியை கீழே போட்டு சென்றதாகவும். இல்லையென்றால் அவர் துப்பாக்கியோடு தப்பிச் சென்றதால், அவர் மிக மிக ஆபத்தான நபர் என்று கூறி, பொலிசார் கண்டதும் சுடும் உத்தரவை பெற்று அவரை போட்டு தள்ள திட்டம் போட்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
–athirvu.com




























இந்த அதிர்வு .காம் இலங்கை அரசாங்கத்திட்கு சார்பானது மக்களிடம் பெரு மதிப்பு பெட்ரா இளஞ்செழியன் ..வீதியில் நடக்கும் விவாகரங்களுக்கு கடடை பஞ்சாயத்து செய்வதில்லை …மாணவி கொலையில் ஒரு போலீஸ் DIG கைது செய்யப்படட அடுத்த நாள் இந்த சம்பவம் நடந்து உள்ளது கவனிக்கவும்