1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது, எனது தந்தையாரான காமினி திசநாயக்க ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அந்த உடன்பாட்டை எதிர்த்தது.
அந்த உடன்பாடு கைச்சாத்திடப்படாது போயிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடிக்க, சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு அளித்திருக்காது.
1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
பிரபாகரனுக்கு இந்தியா உதவியிருந்தால், சிறிலங்காவில் நிலைமைகள் மோசமாக இருந்திருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
-puthinappalakai.net
1. அன்று இந்தியாவும் இலங்கையும் செய்துக் கொள்ளப்பட்டது சமாதான உடனப்பாடல்ல! தமிழக மக்களை போன்று இந்த உடன்படிக்கை சமாதான உடன்படிக்கையென்று எண்ணி கடல் கடந்து வாழும் தமிழர்களும் ஏமார்ந்து விடக் கூடாது; இந்தியாவும் இலங்கையும் அன்று போரிட்ட்டார்களா சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த? உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டுமென்றால் அது பிரபாகரனுக்கும் இலங்கை அரசுக்கும் அல்லவா ஏற்படுத்தியிருக்க வேண்டும்; ஈழத் தமிழர்களுக்கும் இந்த உடன்படிக்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மொத்தத்தில் இந்த உடன்படிக்கையானது ஐநா விதிமுறைகளை மீறியச் செயல். ஆதலால் இது சர்வதேச விதிமுறைகளை மீறியச் செயல். இந்த உடன்படிக்கையின் மூலம் ஒரு விஷயம் மட்டும் நன்குத் தெளிவாகியுள்ளது. ஈழத் தமிழர் விவகாரத்தில் ஏதோவொரு வேண்டாத அரசியல் உள்நோக்கத்தோடு இந்த இரு அரசுகளும் அன்றுச் செயல்பட்டுள்ளார்களென்பது மட்டும் உண்மை.