11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 இலட்சம் மக்கள் பரிதவிப்பு!

varatchiஇலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 இலட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத்துரிதப்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவிககையில்,

Sri-Lankaஅம்பாறை, திருகோணமலை, மஹாஓயா, பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் குடிதண்ணீருக்கேபெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

விவசாயக் காணிகளுக்கு சுழற்சிமுறையில் நீர்விநியோகம் செய்யப்படாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மொரகஹாகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இப்போதுநீர் வழங்கப்பட்டு வந்தபோதிலும் அது காலங்கடந்த ஏற்பாடானதால் நீர் வெறுமனேவிரயமாகிக்கொண்டிருக்கிறது.

2015, 2016ஆம் ஆண்டுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கானஇழப்பீடுகள் சரியாக வழங்கப்படவில்லை. ஏக்கரொன்றுக்கு 8,650 ரூபா மட்டுமேஇழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 10 ஆயிரம் ரூபா விவசாயக் காப்புறுதிக்கானதவணைப் பணமாகக் கழிக்கப்பட்டுள்ளது. இது ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை’ போலாகும் கெ அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: